இலங்கை மகளிர் அணி சகலதுறை வீராங்கணை ஸ்ரீபலி ஓய்வு!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீராங்கணை ஸ்ரீபலி வீரக்கொடி உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

34 வயதான வேகப்பந்து வீச்சு சகலதுறை வீராங்கணையான ஸ்ரீபலி, 89 ஒருநாள் போட்டிகளிலும் 58 டி 20 போட்டிகளிலும் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்தார்.

தனிப்பட்ட காரணங்களினால் ஓய்வுபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். “ஒருநாள் ஓய்வு முடிவை அறிவிப்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். இதுதான் சரியான நேரம் என தோன்றுகிறது“ என தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை அணியில் நிரந்தர இடம்பிடித்திருந்த, வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீபலி, ஒருநாள் போட்டிகளில் 722 ரன்கள் மற்றும் 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டி20 போட்டிகளில் 209 ரன்கள் மற்றும் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2009, 2013 மற்றும் 2017 ஆகிய மூன்று 50 ஓவர் உலகக் கோப்பைகளிலும், ஐந்து டி 20 உலகக் கோப்பைகளிலும் – 2009, 2010, 2012, 2014 மற்றும் 2018- அவர் கலந்து கொண்டிருந்தார்.

2018இல் ரி20 உலகக்கிண்ண தொடரிலி, பங்களாதேஷிற்கு எதிரான ஆட்டமே அவர் இறுதியாக ஆடிய சர்வதேச போட்டி.

அண்மையில் தொழில்முறை உடல்வலுவூட்டல் பயிற்சி நிலையத்தை அவர் ஆரம்பித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here