சுயேட்சைக்குழு உறுப்பினர் புகைப்படம் எடுத்தார்: தமிழ் அரசு கட்சி ஊடகவியலாளர் முறைப்பாடு!

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற தன்னை, சுயேட்சைக்குழு பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் புகைப்படம் எடுத்தார்கள் என, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஊடகவியலாளர் ஒருவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (22) காலை செய்தி சேகரிப்பதற்காக சென்ற முன்னாள் வேட்பாளரான ஊடகவியலாளர், நீதிமன்ற நுழைவாயிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து கரைச்சி பிரதேச சபையின் சுயேச்சைக் குழு உறுப்பினர் மற்றும் அவருடன் வந்த மற்றுமொருவர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும், இதுதொடர்பில் கேட்ட போது படம் தேவையென்று தெரிவித்துவிட்டு மீண்டும் தான் பயணித்த மோட்டா் சைக்கிளையும் படம் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து புகைப்படம் எடுத்தவர் தொடர்பான விபரங்களை பெற்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியதுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கிளிநொச்சியில் கேடயம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் மு.சந்திரகுமார் தரப்பிற்கும், தமிழ் அரசுகட்சி வேட்பாளர் சி.சிறிதரன் தரப்பிற்குமிடையில் அண்மையில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ஏட்டிக்குபோட்டியாக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here