முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் சாரதி உள்ளிட்ட மூவருக்கு பிணை

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நிலையில் ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளரின் மனைவியை தாக்கியதோடு சொத்துகளுக்கும் சேதம் விளைவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாரதி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மூவருக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் ஒவ்வொருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் உருத்திரபுரம் பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டவர்கள் குறித்த வீடு ஒன்றின் வாயிற்கதவில் வேட்பாளர் சிறிதரன் அவர்களின் அவர்களின் போஸ்ரர் ஒன்றை ஒட்டியுள்ளனர். இதற்கு வீட்டு உரிமை அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டிய போஸ்ரை கிழித்துள்ளார் இதன் போது தேர்தல் பரப்புரையில் வந்தவர்கள் வீட்டுரிமையாளரையும் மனைவிளையும் தாக்கியுள்ளதோடு சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் சாரதி உள்ளிட்டமூவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here