கிளிநொச்சியில் வீடு உடைக்கப்பட்ட முன்னாள் பெண் போராளியின் இன்றைய நிலை: மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு!

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்டவருமான முன்னாள் பெண் போராளி வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டு அவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியோடு, வீடு உடைப்பதற்கு வந்தவர்கள் தாம் கிளிநொச்சி பொலிஸாரின் ஒத்துழைப்புடனே உடைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்த அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அனுமதி இன்றி எந்த தனிநபரும் எவரினது வீடுகள் மற்றும் கட்டங்களை உடைக்க முடியாது என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அத்துமீறி குறித்த பெண் வசித்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் எறியப்பட்டு அவரும் தாக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் ஆரம்ப கட்ட சட்ட நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் குறித்த பெண் கடந்த திங்கள் கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் முறையிட்டதற்கு அமைவாக மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் ரி். கனகராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் ஆலுவலகம் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தற்போது குறித்த பெண் ஊடகம் ஒன்று அமைத்துக் கொடுத்துள்ள தரப்பாள் கொட்டில் ஒன்றில் வசித்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here