ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!:முதலமைச்சர், ஆளுனருக்கு அனுப்பப்பட்ட முக்கிய கடிதம்!

வடமாகாணசபை அமைச்சரவை குழப்பம் தொடர்பாக வடக்கு முதலமைச்சர், ஆளுனருக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மாகாணசபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, அமைச்சரவை சர்ச்சையில் ஆளுனரும், முதல்வரும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்- வடமாகாணசபையின் 129 அமர்வில் நீண்டநேரம் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது. அதன்படி பின்வரும் விடயங்களை தங்கள் இருவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 154 F (6) உறுப்புரைக்கு தங்கள் அவதானம் கோரப்பட்டுள்து. அது பின்வருமாறு உள்ளது.

மாகாணசபைக்கு அமைச்சர் சபையானது கூட்டாக பொறுப்புகூறவும், பதிலளிக்கவும் வேண்டியது.

மேற்படி இந்த ஏற்பாட்டின்படி செயற்பட ஒரு சட்ட வலுவுள்ள அமைச்சர் சபை இருத்தல் வேண்டும். ஆனால், இப்பொழுது இருக்கின்ற அமைச்சர் சபை இதற்கு அமைவாக இல்லாதது மட்டுமின்றி, அரசியலமைப்பின் உறுப்புரை 154 F (1) இற்கும் முரணானது என்பதுடன், மேன்முறயீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிற்கும் முரணானது.

இந்த இடைக்கால கட்டளையின் 2வது பக்கத்திலுள்ள பின்வரும் வசனத்திற்கு தங்கள் அவதானம் கோரப்படுகிறது.

“இந்த நீதிமன்றத்தின் மாண்புகளின் படியும், வழங்கப்பட் இடைக்கால நிவாரணத்தின்படியும், அரசியலமைப்பின் மட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு நியமன அதிகாரி அமைச்சர்களின் எண்ணிக்கை சம்பந்தமாக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.“

ஒரு அமைச்சரின் நியமனம் அல்லது நீக்கம் ஆளுனர் மற்றும் முதலமைச்சரின் கூட்டு நடவடிக்கையாகும்.

நியமன செயற்பாடு ஆளுனருடையது கையொப்பத்துடனும், முதலமைச்சரின் சிபாரிசுடனும் இருக்க வேண்டியது அரசியலமைப்பின் உறுப்ரையின் 154 F (5) இன் ஏற்பாடாகும். எனவே, தங்கள் இருவரையும் இந்த ஏற்பாட்டுக்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை சம்பந்தமாக மேலும் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த சபை தீர்மானித்துள்ளது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here