கொரோனா நோயாளிகளிற்கிடையில் மோதல்: 5 பேர் மேலதிக சிகிச்சையில்!

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளர்களின், இரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனரென, வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (22) காலை இந்த சம்பவம் நடந்தது. இதை தொடர்ந்து, வெலிகந்த கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களின் நிலை அவ்வளவு மோசமாக இல்லை என்று பொலன்னருவ பொது மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சம்பத் இந்திகா குமாரா தெரிவித்தார்.

கந்தக்காடு மற்றும் சேனபுரவில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் இரு குழுக்களுக்கு இடையே இந்த மோதல் நடந்தது.

கந்தக்காடு போதைப்பொருள் சிகிச்சை மையத்தில் 279 கொரோனா நோயாளிகளும், வெலிக்கந்த சேனபுர போதைப்பொருள் சிகிச்சை மையத்தில் 84 கொரோனா நோயாளிகளும் உள்ளனர்.

அவர்களில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. கை, கால்களால் மட்டுமல்லாமல், துடைப்பம் மற்றும் துப்புரவு பணிக்கு பயன்படுத்தப்படும் பிற பொருட்களாலும் ஒருவருக்கொருவர் தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இராணுவத்தினர் தலையிட்டு, நிலைமையை சுமுகமாக்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here