அலைபேசியை சார்ஜரில் இணைத்து பாடல் கேட்டபடி தூங்கிய இளைஞன் பலி!

இரவு உறங்கச் சென்றபோது அலைபேசியை சார்ஜரில் இணைத்துவிட்டு, ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு உறங்கிய இளைஞன் ஒருவர், அலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார்.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிப்ன்ன- துனகதெனிய பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

அலைபேசி வெடித்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன், சிகிச்சைப் பலனின்றி நேற்று (21) உயிரிழந்துள்ளார்.

வெலிபென்ன- துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதடைய இளைஞனே,  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here