மண் வியாபாரிகளால் கொல்லப்பட்ட மட்டு சிறுமி: மரண விசாரணை வீடியோ!

மட்டக்களப்பு தன்னாமுனை காமாச்சிபுரம் வீட்டு திட்ட கிராமத்தில் மண் வியாபாரிகளால் வெட்டப்பட்டிருந்த குளத்தில் விழுந்த எட்டு வயது சிறுமி பரிதாபமாக பலியாகிய சம்பவத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம். கடந்த 9ம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

எதிர்வரும் 13 திகதி தங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டில் குடியேறும் கனவுடன் கல்லடியில் இருந்து வந்த அனுரஞ்சித் அனுசேராஅசேல் என்ற எட்டு வயது சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இந்த சிறுமியின் மரணத்திற்கு காரணம் மண்ணை விற்கும் கொள்ளையர்களின் பணத்தாசையால் காமாட்சி கிராமத்தில் இரவோடு இரவாக வெட்டப்பட்ட குளமே என தெரியவந்துள்ளது.

சிறுமியின் உயிரை பறிப்பதற்கு காரணமான முன்னாள் கருணா குழு உறுப்பினரும் த‌ற்போதைய பிரபல மண் தாதாவான ஞானப்பிரகாசம் யூலியன் ஜெய் பிரகாஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் பலியான சிறுமி மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் தரம் 3 கல்வி கற்கும் மாணவியாகும்.

இந்த சம்பவம் தொடர்பில் அங்குள்ள மக்களின் அப்பிராயங்களை தமிழ்பக்கம் வெளிப்படுத்துகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here