எமது சங்கத்து ஆட்களும் போட்டியிடுவதால் கூட்டமைப்பிற்கே ஆதரவு: இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்!

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களை தெரிவு செய்யுமாறும் கோரிகை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக இலங்கை தமிழர் ஆசரியர் சங்கத்தின் நிருவாகச் செயலாளர் செயலாளர் குமாரசாமி அருணாசலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2020 ஓகஸ்ட் 05ஆந் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

சங்க உறுப்பினர்கள் தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக செயற்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தமது சங்கத்தின் தற்போதைய தலைவர் இரா.சச்சிதானந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதுடன் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் சங்கத்தின் ஆலோசகருமான த.மகாசிவம் அவர்களின் பெயர் தேசிய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் கோரிக்கைக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணத்தில் 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here