எமது தரப்பே தாக்கப்பட்டது: சிறிதரன் தரப்பு விளக்கம்!

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமாகிய சி.சிறீதரனை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிதரனின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ய கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்ற குறித்த பரப்புரைக் குழுவின் தொண்டர்கள் இருவரையும், தாக்குதல் நடத்திய நபரின் மனைவியை தாக்கியதாக தெரிவித்து பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here