மஹிந்தவின் முகத்தில் கரி பூசிய சீனா!

முன்னைய அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்ததாக மஹிந்த தரப்பு தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரதமர் மஹிந்தவின் முகத்தில் கரியை பூசியுள்ளது சீனா.

சில தினங்களின் முன்னர் மஹியங்கன பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், முன்னைய அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினார்.

அப்போது அமைச்சர்களாக இருந்த சிலர் மௌனமாக இருந்தனர், அவர்கள் குரல் எழுப்பியிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

எனினும், இலங்கையிலுள்ள சீன தூதரகம் இது குறித்து ருவிற்றரில் வெளியிட்ட குறிப்பில், மஹிந்தவின் கருத்தை நிராகரித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கே சொந்தமானது என தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியெழுப்ப சீன நிறுவனங்களிற்கு அழைப்பு விடுத்ததையும் சுட்டிக்காட்டியது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் உரிமை, பாதுகாப்பு, இறையாண்மை 100 வீதம் உறுதிசெய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

2017 டிசம்பர் மாதத்தில் கையெழுத்தான் உடன்படிக்கையின்படி, அம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழு (எச்ஐபிஜி) மற்றும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் நிறுவனங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here