Naked Athena: நிர்வாணமாக யோகா செய்து இராணுவத்தை விரட்டிய பெண் (VIDEO, PHOTOS)


அமெரிக்காவில் நிர்வாணமாக யோகாசனம் செய்து, பொலிசார், இராணுவத்தினரை விரட்டிய பெண்ணொருவரின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மினசொட்டா மாநிலத்தின் மினாபொலிஸ் நகரத்தில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பரினத்தை சேர்ந்த ஜோர்ஜ் ஃபிளொயிட்டிற்கு நீதி கோரி பல பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தபடியுள்ளன.

இந்த நிலையில் ஓரிகன் மாநிலத்தின் போர்ட்லாண்ட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் பழமையான சிலைகளை தகர்த்து வருகிறார்கள். அடிமைச்சின்னமாக கருதப்படும் சிலைகளையே அவர்கள் தகர்த்து வருகிறார்கள்.

சிலைகளை பாதுகாக்கும்படி ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, போர்ட்லாண்ட் போராட்டத்தை ஒடுக்க பொலிசாரும், இராணுவத்தினரும் அங்கு வந்தனர்.

போராட்டக்காரர்களும், பொலிசாரும் எதிரும் புதிருமாக நின்று பதட்டமான சூழல் உருவாகியிருந்த நிலையில், பெண்ணொருவர் போராட்டக்காரர்களின் முன்பாக வதிடீரென நிர்வாணமாக தோன்றினார். முகக்கவசம், தொப்பி மட்டும் அணிந்திருந்தார்.

அவர் நிர்வாண நிலையில் யோகாசனம், பொலோ நடன அசைவுகளை செய்தார். இதனால் ஸ்தம்பித்து போன பொலிசாரும், இராணுவத்தினரும் மேற்கொண்டு நகரவில்லை.

சில நிமிட இழுபறியின் பின்னர் எரிவை ஏற்படுத்தும் மிளகு தோட்டாக்களை பெண்ணின் காலடியை நோக்கி பொலிசார் சுட்டனர். இதன்போது, போராட்டக்காரர் ஒருவர் வீடுகள் அமைக்க பயன்படுத்தும் கூரையை கேடயமாக பிடித்தபடி பெண்ணை காப்பாற்ற அவருக்கு முன்பாக ஓடினார்.

எனினும், அவரது கேடய முயற்சியை ஒதுக்கி விட்டு, பாதுகாப்பு தரப்பினரை அந்த பெண் நேரடியாக எதிர்கொண்டார்.

எனினும், அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. 10 நிமிடங்களின் பின்னர் பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்தப் பெண்ணும் ஆர்ப்பாட்டங்களின்றி அந்த இடத்திலிருந்து நகர்ந்த சென்று விட்டார்.

அவரது முகம் அடையாளம் காணப்படவில்லை.

சமூக ஊடகங்களில் அவரை நிர்வாண அதீனா (Naked Athena) என சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர். அதீனா என்பவர், பண்டைய கிரேக்கத்தின் பெண் போர்த்தேவதையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here