தாயாரின் கள்ளக்காதலனால் சீரழிப்பு; வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்த தாயார்: சிறுமியின் மரணத்தின் காரணம் வெளியானது!

புத்தளத்தில் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக தாயாரால் குறிப்பிடப்பட்ட சிறுமி, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. புத்தளம் ஆதார வைத்தியசாலையில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி டபிள்யூ.எஸ்.கே.ஆர் திரு விக்ரமராச்சி மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறுமியை பாம்பு கடித்ததாக குறிப்பிட்டு, கடந்த 16ஆம் திகதி தாயார் வைத்தியசாலையில் அனுமதித்தார். உயிராபத்தான நிலையிலிருந்த சிறுமி, அங்கு உயிரிழந்திருந்தார்.

இறப்பில் சந்தேகம் இருந்ததன் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிறுமி தங்கியிருந்த புத்தளம் ஆசிரிகம தனியார் தென்னந் தோட்டத்தில் பொலிசார் நடத்திய சோதனையில் இரத்தக்கறை படிந்த ஆடைகள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இறந்தவரின் தாய் மற்றும் இரண்டு தம்பிகளை பொலிசார் விசாரித்தனர். இதன்போது தாயாரின் கள்ளக்காதலனால் சிறுமி சீரழிக்கப்பட்ட விடயம் தெரிய வந்தது.

தென்னந்தோட்டத்தை மேற்பார்வையிடும் இளைஞனுடன் சிறுமியின் தாயார் கடந்த 8 மாதங்களாக கள்ளக்காதல் தொடர்பை பேணி வந்துள்ளார். அந்த காமுகனே சிறுமியை சீரழித்துள்ளான். சிறுமியின் தாயாரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

பாலியல் வல்லுறவினால் சிறுமிக்கு அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டது. எனினும், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே வைத்திருந்துள்ளார் தாயார். சிறுமியின் உடல்நிலை மோசமாகி, நினைவிழக்க ஆரம்பித்த பின்னரே வைத்தியசாலையில் அனுமதித்தார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காமுகன் தலைமறைவாகி விட்டான். அவனை பொலிசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here