ஜனாதிபதியுடன் இ.தொ.காவின் தேர்தல் பிரச்சாரம் நுவரெலியாவில்

ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ இன்று (21) செவ்வாய்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நுவரெலியா, பூண்டுலோயா பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ மக்களை சந்தித்து மக்களின் குறைப்பாடுகளை கேட்டறிந்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களாகிய மருதபாண்டி ரமேஸ்வரன், கனபதி கனகராஜ், பழனி சக்திவேல், அருளாநந்தம் பிலிப்குமார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

-தலவாக்கலை பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here