கருணாவை கைது செய்யக்கோரும் மனு நிராகரிப்பு!

முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடுவல நகர சபையின் உறுப்பினரான, போசத் கலஹபதிரனவால் தாக்கல் செய்யப்பட்ட மனு​வே ​இன்று (21) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் 3,000 இராணுவத்தின​ரைக் கொன்றதாக, கருணா அம்மான் கருத்து தெரிவித்திருந்தமை தொடர்பில், அவரைக் கைதுசெய்யுமாறு கோரியே குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here