பூசா சிறைக்குள்ளிருந்தபடி ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த பாதாள உலக தலைவர்கள்!

பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரக மற்றும் பொடி லாசி ஆகியோர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளiர படுகொலை செய்யவுள்ளதாக விடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சிஐடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கைதிகளும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் பல மூத்த சிறை அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு குற்றவாளிகள் குழு ஜூன் 26 அன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது. கைதிகளுடன் பேச்சு நடத்த சிறைச்சாலைக்கு சென்ற அதிகாரிகள், ஒவ்வொரு கைதியுடனும் தனித்தனியாக அறிக்கை பெற்றனர்.

இதன்போதே கொஸ்கொட தாரக மற்றும் பொடி லாசி ஆகியோர் இந்த அச்சுறுத்தலை விடுத்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சி.ஐ.டி.க்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், இந்த பாதாள உலக உறுப்பினர்கள் ஜனாதிபதியையும் பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் மீதான மரண அச்சுறுத்தல்கள் தொடர்பாக சிறைச்சாலை திணைக்கள ஆணையாளரினால், பதில் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூல முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விசாரணை நடத்த சிஐடியிடம் பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். சிஐடியின் அதிகாரிகள் நேற்று பல மூத்த சிறை அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்தனர்.

அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், கைதிகள் இருவரிடமும் விசாரணை நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here