நல்லூர் திருவிழா: 50 பக்தர்களிற்கே அனுமதி; கமராவில் முகம், அடையாள அட்டையை காண்பித்தே நுழையலாம்!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெரும் திருவிழாவிற்கு 300 பக்தர்களை அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார் யாழ்.மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் 50 பேருக்கே அனுமதி வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபையில் இன்று செவ்வாய்கிழமை நடந்த விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500 ற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இருப்பினும் சுகாதார துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோக பூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 50 பக்தர்களையே அனுமதிக்க முடியும். ஜனாதிபதியின் அறிவுறுத்தல்படி, அனைத்து பக்தர்களையும் அனுமதிப்பதென பத்திரிகை செய்திகள் வெளியாகியிருந்தாலும், அது குறித்த உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவும் கிடைக்காததால், 50 பேரையே அனுமதிக்க முடிவாகியது.

மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை தடை செய்யப்படவுள்ளது.

அத்துடன், நல்லூருக்குள் நுழையும் அனைத்து நுழைவாயில்களிலும் உணர்திறன் கூடிய கமராக்களை பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆலயத்திற்குள் நுழைபவர்கள் கமராவில் தமது முகத்தையும், அடையாள அட்டையையும் காண்பித்த பின்னரே நுழைய முடியும்.

ஆலய சூழலில் எந்த வியாபார ஸ்தலங்களையும் அனுமதிப்பதில்லையென முடிவாகியுள்ளது.

அத்துடன், தற்போதுள்ள வர்த்தக நிலையங்கள் தமது வர்த்தன தன்மையை மாற்ற முடியாதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here