அனைத்து கடற்படையினரும் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

இலங்கையில் கொரோனா பாதிப்பிற்குள்ளான அனைத்து கடற்படை வீரர்களும் குணமடைந்துள்ளனர்.

தொற்றுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இறுதி 3 கடற்படையினரும் குணமடைந்த வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

906 கடற்படையினர் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜா எல, சுதுவெல பகுதியில் கொரொனா தொற்றிற்குள்ளாகியிருந்த போதைப்பொருள் பாவனையாளர் உள்ளிட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்தவர்கள் களமிறக்கப்பட்ட பின்னர், கடற்படைக்குள் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நோயாளி இலக்கம் 206 என அமையாளம் காணப்பட்ட ஜா எலவை சேர்ந்த போதைப்பாவனையாளர் மூலம் கடற்படையினர் 906, வெளிநபர்கள் 150 இற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here