கொரோனா அச்சத்தால் ரி20 உலக கோப்பை போட்டிகள் ஒத்தி வைப்பு!


2020 ரி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கொரோனா அச்சத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. ஆடவர் ரி20 உலக கோப்பை 2020 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் சூழலில் இந்த போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தொடர்ந்து, ஐ.சி.சி. ஆடவர் ரி20 உலக கோப்பை 2021 கிரிக்கெட் போட்டிகள், 2021ம் ஆண்டு ஒக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 14ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது. இதேபோன்று ஐ.சி.சி. ஆடவர் ரி20 உலக கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிகள், 2022ம் ஆண்டு ஒக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 13இல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

எனினும் இந்த போட்டிகள் நடைபெறும் இடம் பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. 50 ஓவர் உலக கோப்பை போட்டி, 2023ம் ஆண்டு ஒக்டோபர் முதல் நவம்பர் வரை இந்தியாவில் நடைபெறும் என்றும் இறுதி போட்டி நவம்பர் 26ல் நடக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here