சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவருக்கு ரூபா 75 ஆயிரம் தண்டப்பணம்

சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவருக்கு ரூபா 75 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை அணைக்கட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(19) மதியம் சட்டவிரோத மணல் அகழ்வுவில் ஈடுபட்ட இருவர் உட்பட இரண்டு டிப்பர் வாகனங்களுடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.ரம்ஷீன் பக்கீர் தலைமையிலான குழுவினர் விஷேட சுற்றிவளைப்பில் போது கைது செய்யப்பபட்டிருந்தனர்.

இதனை அடுத்து இன்று(20) குறித்த சந்தேக நபர்கள் இருவரும் சான்று பொருட்களும் நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டிருந்தன.

இதன் போது ஒரு சந்தேக நபர் தனக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டு ரூபா 75 ஆயிரம் தண்டப்பணத்தை செலுத்தியதை அடுத்து விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன் மற்றைய சந்தேக நபர் தனது குற்றச்சாட்டுக்களை மன்றில் ஏற்றுக்கொள்ளாமையினால் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 24 திகதி வரை குறித்த வழக்கு தவணை இடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here