இடம்பெயர்ந்த முஸ்லிம்களிற்கு தனது காணியை வழங்கிய டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் இருந்த 1995 காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் நிர்க்கதியாக இருந்த வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது தனிப்பட்ட காணிகளில் அம்மக்களை குடியமர்த்தி அவர்களுக்கான வீடுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வை சிறப்பானதாக உருவாக்கிக் கொடுத்திருந்தார்.

அக்காலத்தில் குடியிருப்பு நிலங்களுக்கான காணி உரிமங்கள் அம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அக்குடியிருப்பு மக்கள் தமது இதர தேவைப்பாடுகளான முன்பள்ளி பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம் போன்வற்றை அமைச்சருக்கு சொந்தமான காணியில் உருவாக்கி செயற்பட்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் முன்பள்ளி, பள்ளிவாசல், விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா ஆகியன அமைந்துள்ள காணிகளுக்கான காணி உரிமங்களை வர்கள் பெற்றுக்கொள்ளாதிருந்த நிலையில் அதற்கான உரிமங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரில் இருந்த அக்காணிகளுக்கான உரிமங்களை இன்றையதினம் குறித்த நிர்வாகங்களிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-அமைச்சின் ஊடகப்பிரிவு-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here