சகல வசதிகளும் கொண்ட கிராமமாக இரணைதீவு கிராமம் உருவாக்கப்படும்: அமைச்சர் தேவானந்தா உறுதி!

இரணை தீவு கிராமம் விரைவில் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக மாற்றப்படும் எனவும் குறித்த கிராமத்தவர்களுக்கான படகுகளை இரண்டு கட்டங்களாக பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி இரணைமாதா நகர் மக்களினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த இரணைதீவு மக்கள் நீண்ட காலமாக மீள்குடியேற்றப்படாத நிலையில் 2018 ஆம் ஆண்டு பிரதேச மக்கள் அத்துமீறி நுழைந்து மீள்குடியேறினர்.

இவ்வாறு மீள்குடியேறுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே தங்களுக்கு உத்வேகத்தை அளிததிருந்ததாக தெரிவித்த பிரதேச மக்கள், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தேர்தலுக்குப் பின்னர் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேறறப்படும் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, இரணைதீவு கிராமத்தை சகல வசதிகளும் கொண்ட கிராமமாக மாற்றித் தரப்படும் என உறுதி அளித்ததுடன் சிறந்த வாழ்வாதாரத்தினை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.

இரணைதீவு கிராமத்தில் தற்போது சுமார் 350 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் 70 படகுகள் மாத்திரமே தற்போது இருக்கின்ற நிலையில் எஞ்சிய குடும்பங்களுக்கான பகுகளை இரண்டு கட்டங்களாக அடுத்த வருட ஆரம்பத்திற்குள் பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here