யாழிலிருந்து தனிப்படகில் சென்று இந்தியாவில் ஒருநாள் ஓய்வெடுத்து விட்டு திரும்பியவர் சிக்கினார்!

யாழ்ப்பாணத்திலிருந்து படகொன்றில் இந்தியாவிற்கு சென்று மீண்டும் திரும்பி வந்தவர் கடற்படையினரிடம் சிக்கியுள்ளார்.

இந்தியாவிலிருந்து திரும்கி வரும்போது அவரது படகு பழுதடைந்து, தொண்டைமானாறு கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்தவரை கடற்படையினர் மீட்டனர்.

அச்சுவேலி, வளலாய் பகுதியை சேர்ந்த செல்வரட்ணம் செல்வதாஸ் (35) என்பவரே சிக்கினார்.

கடந்த வெள்ளிக்கிழமை இவர் படகொன்றில் இந்தியா சென்றுள்ளார். பின்னர் சனிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்போது அவரது படகு பழுதடைந்துள்ளது.

கடலில் தத்தளித்து கொண்டிருந்தவரை கடற்படையினர் மீட்டனர்.

அவர் அச்சுவேலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி, பிசிஆர் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here