இராவணனின் புஷ்பக விமானம் பற்றிய தகவல்களை கோரி அரசு விளம்பரம்!

இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தை பற்றிய மூலத்தகவல்களை கோரி இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை பத்திரிகை விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறது.

“இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது.

இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது சிவில் விமான சேவை அதிகார சபை.

இதனை 2020 யூலை 31 க்கு முன்னர் 0766317110 என்கிற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ mgrrdp@caa.lk என்கிற மின்னஞ்சல் மூலமோ அல்லது குறிப்பிட்ட விலாசத்துடன் தொடர்பு கொண்டோ அறியத்தந்தால் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது இலங்கை அரசு.

இராவணன் தமிழர் அல்ல, அவர் சிங்களவர் என நிறுவ முற்படும் அரசின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here