8 வயது சிறுமியை சீரழித்த 12, 14 வயது சிறார்கள்; இணையக்கல்விக்கு வழங்கிய தொலைபேசியால் விபரீதம்: பெற்றோரே எச்சரிக்கை!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் 8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  இரண்டு சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விசுவமடு, தொட்யடி மேற்கு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 12, 14 வயதுடைய சிறுவர்களே, புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குள்ள ஆலய திருவிழா ஒன்றை தொடர்ந்து சிறுவர்களும், சிறுமியர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதன்போது 8 வயதான சிறுமியொருவரை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று 12, 14 வயதான இரண்டு சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இதை அவதானித்தவர்கள் சிறுவர்களை பிடித்து “இரண்டு போட்டுவிட்டு“ புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்தனர். இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர். இதன்போது 14 வயது சிறுவனிடம் பெறுமதியான ஸ்மார்ட் போன் மீட்கப்பட்டது. இதனை பொலிசார் சோதனையிட்டனர்.

பாடசாலை, தனியார் கல்விகள் நடத்த முடியாத நிலையில் இணைய வழி கல்விக்காக பெற்றோர் இந்த கையடக்க தொலைபேசியை வாங்கிக் கொடுத்ததும், இணைய இணைப்பின் வழியாக கூகிள் தேடுபொறியில் பாலியல் தொடர்பான தேடல்களே அதிகமாக இடம்பெற்றிருந்ததும் தெரிய வந்தது.

சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here