நேற்று 20 பேருக்கு தொற்று!

நாட்டில் நேற்று 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதன்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,724 ஆக உயர்ந்துள்ளது.

சவுதியிலிருந்து திரும்பி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த 9 பேர், கட்டாரிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த 3 பேர், மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 2, இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுடன்அடையாளம காணப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த 4 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

இதன் மூலம் தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2724 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 12 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2035 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் 578 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here