நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் 50 வீதத்தால் குறைப்பு!

நாளை செவ்வாய்க்கிழமை முதல் பஸ் போக்குவரத்துக்களை 50 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார கட்டுப்பாடுகளால் பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கையை 50வீதத்தால் குறைக்க அரசு நடவடிக்கையெடுத்திருந்தது. இதனால் பஸ் உரிமையாளர்கள் நட்டமடைவதாக தெரிவித்திருந்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், கட்டண அதிகரிப்பு அல்லது அரச மானியத்தை வலியுறுத்தி வந்தனர்.

இரண்டு யோசனைகளையும் அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்து, பஸ் போக்குவரத்தை குறைப்பதற்கு தீ்ர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here