போலி மாதிரி வாக்குச் சீட்டில் கேடயச் சின்னத்தை மாற்றிய கிராதகர்கள்: தமிழ் அரசு கட்சி அசிங்க வேலை!

கிளிநொச்சியின் பல பிரதேசங்களுக்கும் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போலி மாதிரி வாக்குச் சீட்டில் தன்னுடைய சுயேச்சைக் குழு 5 இன் கேடச்சின்னத்தை மாற்றி வேறொரு சின்னத்தை அச்சிட்டு வழங்கி வருகின்றனர் என சுயேச்சைக் குழுவில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி, புன்ணைநீராவி, பூநகரி ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வீடுகளுக்குச் செல்லும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மக்களிடம் வழங்குகின்ற போலி மாதிரி வாக்குச் சீட்டில் அனைத்துக் கட்சிகளின் சின்னங்களையும் சரியாக அச்சிட்டவர்கள் எமது சுயேச்சைக் குழு 5 இன் சின்னமான கேடயச் சின்னத்தை மாற்றி இம்முறை யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடாத பிரிதொரு சின்னத்தை அச்சிட்டு வழங்கி வருகின்றனர்.

இது மிகமோசமான ஐனநாயக மீறல் அநாகரீகமான செயல். இதனை நாம் வன்மையாக கண்டிகின்றோம்.இந்த தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு எம் பக்கம் திரண்டுள்ளதனை கண்டு அச்சமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந் அநாகரீக செயலை மேற்கொண்டு வருகின்றனர். 75 கள்ள வாக்களித்து ஐனநாயக பண்பை மீறியவருக்கு இது போன்ற செயற்பாடுகள் புதிதல்ல எனத் தெரிவித்த மு. சந்திரகுமார்.

வடக்கு மாகாண சபையில் அமைச்சராக இருந்து ஊழல் குற்றச் சாட்டில் பதவி இழந்தவர் தலைமையில் செல்லும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே இச் செயலை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணைக்குழு மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் முறையிட்டுள்ளோம். எனவே மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் சுயேச்சைக் குழு 5 இன் எமது சின்னம் கேடயம் என்பதனை மக்களுக்கு தெரிவித்துக்கொள் விரும்புகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here