கிரிக்கெட் வீரராக கம்பீரைப் பிடித்திருக்கிறது, மனிதராக அவருக்கு சில பிரச்சினைகள் உள்ளன: ஷாகித் அப்ரிடி!

களம் முதல் களத்துக்கு வெளியே வரை கம்பீர்-ஷாகித் அப்ரிடி மோதல் தொடர்ந்து வருகிறது. ருவிட்டர், வீடியோ என இவர்கள் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

பிரதமர் மோடியைப் பற்றியும் காஷ்மீர் விவகாரம் பற்றியும் பரபரப்பான உணர்வு நிலை பிரதேசங்கள் குறித்து அப்ரிடி வெளிப்படையாக பேசுபவர். இதை தொடர்ந்து, கம்பீர் ஏட்டிக்கு போட்டியாக பேசுவார். கம்பீரின் கருத்துக்கள் சர்ச்சையாக உருவெடுக்கும்.

இந்நிலையில் மீண்டும் கம்பீரை பற்றிய தனது கருத்தை அப்ரிடி தெரிவித்துள்ளார். “ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு துடுப்பாட்டக்காரராக எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் ஒரு மனிதராக அவர் சில வேளைகளில் சில விஷயங்களை பேசுகிறார், அவருக்கு ஏதோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவரது உடல்பயிற்சியாளர் ஏற்கெனவே இதை தெளிவுபடுத்தியுள்ளார்” என்று அப்பாஸுடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.

பேடி அப்டன் தன் புத்தகத்தில் கம்பீரைப் பற்றி கூறும்போது, பலவீனமானவர் மனத்தளவில் பாதுகாப்பற்றவராக அவர் உணர்கிறார் என்று கூறியதைத்தான் அப்ரிடி மீண்டும் கூறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here