சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மரங்கள் கைது

ஓட்டமாவடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருந்த தேக்கு மரங்கள் மற்றும் வாகனம் என்பவற்றை சனிக்கிழமை மாலை வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து வியாபாரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வெட்டப்பட்ட இருபத்தி இரண்டு (22) தேக்கு மரங்கள் மற்றும் சிறியரக வட்டா வாகனமும் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரத்தினை வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here