திருமணமாகி 3 மாதம்: 22 வயது இளம்பெண் சடலமாக மீட்பு!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரை மாய்த்துள்ளார். அவரது வீட்டிலிருந்து சடலம் வெள்ளிக்கிழமை (17) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த, தாமோதரம் தனூஜா (22) என்பவரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த இளம் பெண் திருமணமாகி மூன்று மாதங்களேயாவதாக அவரது உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், கணவன் மதுபோதைக்குட்பட்டவர் என்றும் ஆகையினால் தம்பதியினருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விரக்தியடைந்து உயிரை மாய்த்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, நண்பர்களையும் அழைத்து வந்து வீட்டில் வைத்தே, குறித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் மூழ்கிக் கிடப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here