பிள்ளையாரை திருடியவர் சி.சி.டி.வியில் அகப்பட்டார்

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கொட்டகலை கொமர்சல் பகுதியில் வீடு ஒன்றில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை ஒன்று சொகுசு கார் ஒன்றில் வந்த இளைஞர் ஒருவரால் திருடப்பட்டு மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் முன்புறம் இருந்த பிள்ளையார் சிலையினை காலையில் பார்க்கும் போது அது இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருப்பதனை கண்டு வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கெமராவினை பரிசோதித்துள்ளனர்.

இதன் போது நபரொருவர் சொகுசு கார் ஒன்றில் நேற்று அதிகாலை (18) 5.27 மணியளவில் வந்து பிள்ளையார் சிலையினை திருடி செல்வதும் அதனை மூன்று நிமிடத்தில் மீண்டும் கொண்டு வந்து வைப்பதும் கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

இதேவேளை இதன்கு முன்னர் தனது வீட்டருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

-க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here