2 நாட்களாக உலகை மிரட்டும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 600,435 ஐ எட்டியுள்ளது என்று ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை 14.2 மில்லியனை எட்டியுள்ளது. 7.9 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மிக அதிகரித்த அளவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 224,065 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவே அதிகபட்ச கொரோனா தொற்று எண்ணிக்கை என தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 240,681 பேர் தொற்றிற்குள்ளாகினர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து மிகப்பெரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மிகப்பெரிய பேரழிவை சந்தித்தபோதும், தானும் கொரொனா தொற்றிற்குள்ளாக போதும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க லொக் டவுனை கையாளுவதை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ கண்டித்துள்ளார், இது நாட்டின் பொருளாதாரத்தை “மூச்சுத் திணறச் செய்யும்” என்று கூறியுள்ளார். தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு பிரேசிலின் பொருளாதாரம் 6.4 சதவீதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் தென்னாபிரிக்கா இப்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது

தென்னாபிரிக்காவில் சனிக்கிழமையன்று 13,285 பேருக்கு தொற்று உறுதியானது. தற்போது, பெருவை விட அதிக தொற்றாளர்களை கொண்ட நாடாக தென்னாபிரிக்கா மாறியது. ஆபிரிக்க கண்டத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் பாதிப் பேர் தென்னாபிரிக்காவில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here