தொற்றாளர் எண்ணிக்கை 2073 ஆனது: ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று!

இன்று (18) நாட்டில் 5 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் ஹோமாகமவை சேர்ந்தவர்கள். அந்த பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஹோமாகமவில் 31 பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன்.

அவரது தாய்க்கு கொரோனா தொற்று 2 நாட்களின் முன்னர் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இராணுவ வீரரின் குடும்பத்தில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இராணுவ வீரரின் தந்தை, இரண்டு சகோதரர்கள், பாட்டி ஆகியோர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவ வீரரின் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது கந்தக்காட்டுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 554 ஆகும்.

இன்று நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2703. குணப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023. தற்போது 668 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here