சஜித் அணியால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற முடியாது!

ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக்கூட பெறமுடியாத நிலை ஏற்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குருணாகலை சம்பவம் தொடர்பில் எனக்கு தெரியாது. ஆனால், தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்று உடைக்கப்பட்டிருக்குமானால் அது தவறு.

ஐக்கிய தேசியக்கட்சி புதுவழியை நோக்கி பயணிக்க முயற்சித்தாலும் அதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சி இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளது. சஜித்துடன் 80 வீதமானோரும், ரணில் பக்கம் 20 வீதமானோரும் உள்ளனர். எனவே, ஐக்கிய தேசியக்கட்சியால் மீண்டெழ முடியாது.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் பெறும் ஆசனங்களைவிட, சஜித் அணி குறைவாகவே பெறும். பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தைகூட பெறமுடியாமல் போகும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துகொண்டு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு வதைகொடுத்தனர். அப்படியானவர்கள் இன்று எம்பக்கம் வந்துள்ளனர். இதனால்தான் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.” -என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here