வைரஸை உருவாக்கும் செல்களை அழிக்கும் ‘கில்லர் டி செல்’: ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியின் இரட்டைப் பாதுகாப்பு


கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பலநாடுகள் இருந்து வரும் நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்து 3ம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் இருந்து வருகிறது. இதில் இரட்டைப் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டன் அரசின் உதவியுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்து பரிசோதித்து வருகின்றன.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் 3ம் கட்ட பரிசோதனை சமீபத்தில் தொடங்கியது.

இந்த தடுப்பூசியில் இரட்டைப் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்த ஊசிமருந்தைச் செலுத்தும் போது , உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அன்ட்டி-பொடிக்களை அதிகரிக்கச் செய்ய தூண்டுவதோடு மனித உடலில் வைரஸை உருவாக்கும் செல்களை அழிக்கும் வல்லமை கொண்ட ‘கில்லர் டி-செல்களையும் உருவாக்குகிறது.

இந்த ஆய்வு மிக முக்கியமானது ஏனெனில் வெறும் தடுப்பூசி மட்டும் செலுத்தும் போது சில மாதங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும். ஆனால் கில்லர் டி-செல்கள் ஆண்டுக்கணக்கில் உடலில் நீடிக்கக் கூடியது. இதுவரை இது நல்ல பலன்களை அளிப்பதற்கான அறிகுறிகளை அளித்துள்ளது, ஆனா இன்னும் கொஞ்சம் தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இன்னும் நீண்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

வரும் செப்டம்பரில் இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here