திட்டமிருக்கிறது!

கொரோனா வைரஸை எதிர்கொள்ள தேவையான ஒரு வலுவான திட்டம் ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹரிஸ்பட்டுவவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

தினமும் 5,000 பி.சி.ஆர் சோதனைகளை நடத்துவது, அனைத்து பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு முகக்கவசங்களை வழங்குவதும் தமது திட்டங்களில் அடங்கும் என்றார்.

தமது தலைமையிலான அரசாங்கம் பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 10 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும், அதோடு 2,000 வென்டிலேட்டர்கள் அமைக்கும்.

இலங்கையில் பிபிஇ கிட்களை உற்பத்தி செய்வதாகவும், ஐ.சி.யுகளில் படுக்கைகளை அதிகரிப்பதாகவும் உறுதியளித்தார்.

இனிவரும் நாட்களில் டெங்கு எழக்கூடும் என்பதால், கொரோனா வைரஸில் மட்டும் கவனம் செலுத்தப்படக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்கொள்ள தமது அணி தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here