மாணவர்களிற்கு ஒரு அரிய வாய்ப்பு: தொழில் கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!

13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத் திட்டத்தின் கீழ், உயர்தர தொழில்நுட்ப கற்கை நெறியை தொடர்வதற்காக தரம் 12 மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்றும் இறுதி தினம் 2020 ஜுலை மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் கற்கைநெறிகள் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை பட்டியலையும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். www.mov.gov.lk கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பதாகும்.

மேலதிக தகவல்களுக்காக கல்வி அமைச்சின் தொலைபேசி இலக்கமான 0112 787 136 மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிய முடியும்.

பின்வரும் தொலைபேசி எண்களை அழைப்பதன் மூலமும், மாகாண ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொண்டு, அந்தந்த மாகாணங்களில் தொழில் நுட்ப கற்கை நெறிகளை கொண்ட பாடசாலைகளில் கிடைக்கும் தொழில்முறை பாடங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தெற்கு மாகாணம் – திரு.சாமில் கணேகொட – (091 2233164/070 3017401)
வடக்கு மாகாணம் – திரு.டி.தேவதாஸ் – 077 2342140
ஊவா மாகாணம் – திரு.டி.எம்.ஜி.கே திசாநாயக்க – 055 2229827/0777 614333
மத்திய மாகாணம் – திரு.ஏ.அபேவிக்ரமா 081 2224041/071 9783574
வட மத்திய மாகாணம் – திருமதி.ஈ.எம்.பி.எஸ்.ஏகநாயக்க 025 2225222/0718077583
சபராகமுவ மாகாணம் – திருமதி.சி.ஆர்.மதரராச்சி- 045 2222403/071 8027590
மேற்கு மாகாணம் – திரு.பிரபாத் விதானகே 011 2883470/0718617295
கிழக்கு மாகாணம் – திரு.எஸ். ஷாஹித்-026 2222110/076 4936661
வடமேற்கு மாகாணம் – திரு.யு.ஜி.உயங்கோடா-037 2221362/0718197307

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் இந்த கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும். 26 தொழிற்பயிற்சிகளில் மாணவர்களிற்கு பொருத்தமான ஒன்றை தேர்வு செய்ய முடியும்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கியதாக  311 பாடசாலைகளில் உயர்தர தொழில்நுட்ப பாடத்திட்டம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் அனைத்து கல்வி பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 112 பாடசாலைகளில் தொழிற்பயிற்சி பாடத்திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பயிற்சி பாடத்திட்டத்தை கற்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் துறையில் அறிமுகப் படிப்புகள், ஒரு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தத்துவார்த்த அறிவு மற்றும் பயிற்சி மற்றும் ஆய்வுக் காலத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படும். தொழிற்பயிற்சியை உயர்தரத்தில் பூர்த்தி செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய தொழில் பயிற்சி நிலை 4 (என்.வி.கியூ நிலை 4) சான்றிதழ் வழங்கப்படுகிறது. தொழிற்பயிற்சி காலகட்டத்தில் மாணவர்கள் தினசரி வருகையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு ரூ .500 கொடுப்பனவும் பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here