யாழில் இரு வேறு இடங்களில் சிக்கிய ஹெரோயின்!

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை போலீசார் சோதனையிட்ட போது அவர்களிடம் இருந்து 100 மில்லிகிராம் ஹெரோயின் பக்கெட்டுக்கள் இரு நபர்களிடமும் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு மற்றும் கல்வியங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஓட்டோவில் மறைத்துக்கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பெறுமதியான 15 கிராம் ஹெராயின் போதைப் பவுடர் சாவகச்சேரி மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டது.

சவகச்சேரி நகரப்பகுதி ஊடாக ஓட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட வேளையில் மதுவரி நிலையத்தினர் போதைப் பொருளைக் கைப்பற்றியதுடன் ஓட்டோவில் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி நகர் ஊடாக போதைப்பவுடர் ஓட்டோவில் கடத்தப்படுவதை கிடைத்த தகவலையடுத்து சாவகச்சேரி மதுவரி நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க பிரியந்த தலைமையில் சென்ற மதுவரி நிலையத்தினர் ஏ 9 வீதி ஊடாக வந்த ஓட்டோவை மறித்து சோதனையிட்ட பொது மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தர். இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here