மிருசுவில் படுகொலை பொதுமன்னிப்பு வழக்கு ஒத்திவைப்பு!


மிருசுவில் கொலை வழக்கு குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்ட 4 வழக்குகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்கும் ஜனாதிபதியின் முடிவிற்கு எதிராக 4 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 4 வழக்குகளும் இன்று ஒரே சமயத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதியரசர்கள் எல்.எச். தெஹிதெனிய, யசந்தகோதாகொட முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

சட்டமாஅதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் நெரின் புள்ளே முன்னிலையாகியிருந்தார்.

படுகொலைக்குள்ளானவர்கள் சார்பில் இரண்டு வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன், ஜெப்ரி அழகரட்ணம் ஆகியோர் முன்னிலையானார்கள்.

இரண்டு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையானார். அம்பிகா சற்குணநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் முன்னிலையாகவுள்ளார்.

நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும், ஒரு வழக்கு தொடர்பான ஆவணமே சுனில் ரத்னாயக்கவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் நீதியமைச்சின் செயலாளர் மாற்றமடைந்துள்ளமையால் புதிய செயலாளரின் பெயர் வழக்கில் புதிதாக மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தது.

இதன் காரணமாக வழக்கை செப்ரெம்பர் 24ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here