விரிவுரையாளர் பதவியை துறந்து முழுநேர சட்டத்தரணியானார் குருபரன்!

கலாநிதி குமாரவடிவேல் குருபரன் யாழ் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (17) பல்கலைக்கழக தலைமை பீடத்திற்கு கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறை தலைவர் ஊடக அனுப்பி வைத்துள்ளார்.

இனி அவர் முழுநேர சட்டத்தரணியாகவே செயற்படுவார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக பேரவை தன்னை சட்ட தொழிலில் ஈடுபடுவதிலிருந்து தடை செய்யதுள்ளமையை காரணம் காட்டியுள்ளார்.

தன்னால் உயிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு கொண்டிருக்க தான் இந்த விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பிரயோசனம் இல்லை என்று தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here