கிளிநொச்சியில் இராணுவ வைத்தியசாலையை திறந்து வைத்தார் இராணுவத்தளபதி (PHOTOS)


கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இராணுவ ஆதார வைத்தியசாலையினை திறந்து வைத்தார் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா.

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (17) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு காலை பதினொரு மணிக்கு இரணைமடு படைத்தலைமையகத்தில் இராணுவத்தினருக்கான ஆதார வைத்தியசாலையினை திறந்து வைத்துள்ளார்.

இவ் வைத்தியசாலையில் OPD & ETU, X-RAY DEPARTMENT, DENTAL CENTRE, PULHEEMS & ECG SECTION, DISPENSARY & LAB, WARD COMPLEX போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆதார வைத்தியசாலை திறப்பு விழாவில் மேஜர் ஜெனரல் குணரத்தின, கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிப்பாளர் சரவணபவன், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலன், இராணுவ உயரதிகாரிகள் என பலர் கலந்து கொண்டார்கள்52

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here