சுகாதார வழிகாட்டுதல்களிற்கு சட்டமா அதிபர் அனுமதி!


பொதுத் தேர்தல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டங்கள், தேர்தல் அலுவலக செயற்பாடுகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய இந்த வழிபாட்டல்களிற்கு சட்டமா அதிகர் அனுமதி வழங்கியதையடுத்து, சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வர்த்தமானியிடப்படும்.

சுகாதார வழிகாட்டல்களை வர்த்தமானியிடுமாறு பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரும் இதனை வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், இரண்டு தினங்களில் வழிகாட்டல்கள் வர்த்தமானியிடப்படும் என சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here