கூட்டமைப்பின் எதிர்ப்பையும் மீறி தயான் ஜயதிலக்க ரஸ்யாவுக்கான தூதுவராக அங்கீகாரம்

ரஸ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைக்கும் ஜே. வி. பி யும் எதிர்த்தபோதிலும் பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அவரது நியமனத்தை அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி இந்த நியமனத்தை செய்திருந்தபோதிலும் சில சிவில் அமைப்புக்களும் அவரது நியமனத்துக்கு எதிராக ஆட்சேபம் தெரிவித்திருந்தன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உயர் பதவிகள் குழுவே அங்கீகாரம் வழங்க வேண்டும்.

அவரது நியமனத்தை பாராளுமன்ற குழு அங்கீகாரம் செய்துள்ளபோதிலும் இந்த குழுவுக்கு முன்னர் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டபோது அவரது நடத்தை திருப்திபிகரமாக இருக்கவில்லை என்று ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here