மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக பாடசாலை மாணவி!

மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க பேராசிரியர் மாதவ் காட்கில் பரிந்துரையை மாநிலங்கள் பின்பற்ற வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் பள்ளி மாணவி காவ்யா.

உலகில் பல்லுயிர்ச்சூழல் வளம் மிகுந்த எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்றாக உள்ளது. இந்த மலைத்தொடர்கள் சுமார் 5,000 வகையான பூக்கும் தாவரங்கள், 139 வகை பாலூட்டிகள், 508 வகைப் பறவைகள், 176 வகையான இரு வாழ்வுகள் எனப் பல்லுயிர்களின் கடைசிப் புகலிடமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த மலைத்தொடர்களில் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தை உலகப் பாரம்பர்யமிக்க இடங்களுள் ஒன்றாகக் 1986ம் ஆண்டு, யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு கேரளா, கோவா, கர்நாடகம் எனப் பரந்துவிரிந்த காணப்படும் சிறப்பு வாய்ந்த இந்த மலைத்தொடரில் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித செயல்களால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மலை சிதைவதாக ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும், இந்த மலைத்தொடரை அழிவுப் பாதையில் இருந்து மீட்டுப் பாதுகாக்க ஆய்வாளர்களும், காட்டுயிர் ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்புகளும் இடைவிடாது போராடி வருகின்றனர் .

இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார் பேராசிரியர் மாதவ் காட்கில். இவரின் பரிந்துரையை மாநிலங்கள் பின்பற்ற வலியுறுத்தி நீலகிரியைச் சேர்ந்த பள்ளி மாணவி காவ்யா உள்ளிட்ட 26 பேர் கொண்ட குழு மூலம் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here