ராஜங்கணையில் 12,000 பேர் தனிமைப்படுத்தலில்!

அனுராதபுரம், ராஜங்கணைய பகுதியில் கிட்டத்தட்ட 12,000 நபர்கள் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் நாளை (18) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் மூலம் கொரோனா தொற்றுடன் சிலர் அடையாளம் காணப்பட்டதையடத்து, ராஜங்கணைய பகுதியில் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதனுடன் தொடர்புடைய 5,000 பேரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கந்க்காடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளை பார்வையிட வந்த 114 பேருக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here