ஜா எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்!


ஜா-எல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார். நேற்று (16) கூடிய பொலிஸ் ஆணைக்குழு இதற்கான தீர்மானத்தை எடுத்தது.

ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர், தேர்தல் சட்ட திட்டங்களை அமுல் செய்ய தவறியுள்ளதாகவும், தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, அவரை இவ்வாறு இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக் குழுவின் முறைப்பாடுகள், கோரிக்கைக்கு அமைவாக ஜா-எல பொலிஸ் பொறுப்பதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here