கந்தக்காட்டில் கைதிகளை பார்க்க சென்ற எவருக்கும் கொரோனா இல்லை!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளை பார்வையிட சென்ற எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

கைதிகளை பார்வையிட சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இது உறுதியானதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று 13 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2,687 ஆக உயர்ந்துள்ளது.

8 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடையவர்கள், 4 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர்கள், ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்த நாடு திரும்பியவர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த கைதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்கள் எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here