தாயாரின் கள்ளக்காதலன் கொடூரம்: இலங்கை யுவதிக்கு பிரான்ஸில் கத்திவெட்டு!


இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திவெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிருக்கு போராடி வருகின்றார்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (14) இரவு வைர்ஸ்-சுர்-மார்னே (சீன்-எட்-மார்னே) நகரில் இடம்பெற்றுள்ளது.

இரவு 9 மணிக்கு அப்பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, rue des Pêcheurs வீதியில் உள்ள சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றனர்.

அவ்வீட்டின் படுக்கை அறை ஒன்றில் 19 வயதுடைய இளம் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்டது.

உலங்குவானூர்தியில் வந்த மீட்புக்குழு குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குறித்த இளம் பெண்ணின் உடலில் 15 வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், சமையலறை கத்தி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அதேவேளை, தாக்குதலுக்கு இலக்கானவரின் தாயாரின் 32 வயதுடைய காதலன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும், 13 செ.மீ நீளம் கொண்ட கத்தியால் அப்பெண்ணை தாக்கியுள்ளார் எனவும் அறிய முடிகிறது.

தாக்குதலுக்கு இலக்கான பெண் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் அவரது சகோதரி மற்றும் தாயார் என சிலர் அங்கு வசித்த போதும், எவரும் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here