வன்னி மாவட்டத்தில் தபால் வாக்களிப்பில் பாரிய அசம்பாவிதங்கள் இல்லை: தெரிவத்தாட்சி அலுவலர்


வன்னி மாவட்டத்தில் தேர்தல் முறைப்பாடுகள் 30 கிடைக்கப்பட்டுள்ளது. சிறிய சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகளே அதிகளவில் இடம்பெற்றுள்ளதுடன் 90 வீதமான தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் மாவட்ட அரசாங்க அதிபருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

நேற்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவிக்கும்போது,

வேட்பாளர்கள் விளம்பரப்படுத்தப்பட்ட வாகனங்களில் செல்லும்போது குறித்த வாகனத்தில் சாரதிக்கு அருகில் வேட்பாளர் அமர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு அமர்ந்து பயணிக்கும் வாகனத்தில் வேட்பாளரின் புகைப்படம் இலக்கம் பொறித்திருக்க வேண்டும். இது தவிர்ந்த சந்தர்ப்பங்களில் பொலிசாருக்கு நாங்கள் அறிவித்தல் வழங்கியிருக்கின்றோம். அதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு 2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தபால் மூலமான வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இன்றைய தினமும் (நேற்று) நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

வன்னி மாவட்டத்தில் தகமை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 12709 ஆகக்காணப்படுகின்றது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்குரிய வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தபால் மூலமான வாக்களிப்பு நிலையங்கள் 160 நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்று கொண்டிருக்கின்றது .

வாக்களிப்பு நிலையங்களில் எவ்விதமான வன்முறைச் சம்பவங்கள், அசம்பாவிதங்களும் இடம்பெற்றிருக்கவில்லை . இது குறித்து முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லை. சுகாதாரத்துறை அமைச்சினுடைய ஆலோசனைகளுக்கு அமைவாக தபால் மூலமான வாக்களிப்புகள் முற்று முழுதாக பயன்படுத்தப்பட்டு நடைபெறுகின்றன. தபால் மூலமாக வாக்களிப்புக்கள் 90 வீதமான அளிக்கப்பட்டுள்ளன. தபால் மூலமாக வாக்களிப்புக்கள் வன்னி மாவட்டத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன்று தபால் மூலமாக வாக்களிக்கத்தவறியவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் ஒழுங்கு செய்யப்படுகின்ற தபால் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியும். இன்றுவரையில் 30க்கு குறைவான தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் அவ்முறைப்பாடுகள் அனைத்தும் சாதாரண முறைப்பாடுகள் பாரியளவிலான முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here